காலநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் கட்டமைப்பு ஒப்பந்தமானது (UNFCCC - United Nations Framework Convention on Climate Change) தனது முதலாவது தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் தொகுப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளது (NDC - Nationally Determined Contributions).
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை மட்டுமே தங்களது பசுமை இல்ல வாயுக் குறைப்பு இலக்குகளை அதிக அளவில் உயர்த்தியுள்ள உலகின் மிகப்பெரிய 18 வெளியீட்டாளர்களில் இடம்பெற்ற பிராந்தியங்களாகும்.
NDC ஆனது பாரீஸ் ஒப்பந்தத்தின் ஒரு மையக் கருவாகும், மேலும் இது பாரீஸ் ஒப்பந்தத்தின் நீண்ட கால இலக்குகளின் மீதான ஒரு சாதனையாகும்.
NDC என்பது தேசிய அளவில் உமிழ்வுகளைக் குறைக்கவும் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை ஏற்றுக் கொள்ளவும் ஒவ்வொரு நாட்டினாலும் ஏற்படுத்தப்பட்ட ஒரு முயற்சி ஆகும்.