நிதி ஆயோக்கானது நாடு தழுவிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (NDC - Nationally Determined Contributions) ஆசியாவிற்கான போக்குவரத்து முன்னெடுப்பின் (TIA - Transport Initiative for Asia) “இந்தியக் கூறை” (India Component) வெளியிட்டுள்ளது.
இது இந்தியா, வியட்நாம் மற்றும் சீனாவில் சுடர்க்கரி நீக்கல் முறையிலான போக்குவரத்திற்கான (decarbonize transport) ஒரு விரிவான அணுகுமுறையை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பிராந்திய முன்னெடுப்பாகும்.
ஒவ்வொரு பங்காளர் நாடுகளிலும், NDC-TIA ஆனது பாரீஸ் ஒப்பந்தத்தின் NDC-ன் இலக்குகளை அடைய அதன் துறைசார் பங்களிப்புகளை ஏற்படுத்த உதவ இருக்கின்றது.
NDC-TIA ஆனது 4 ஆண்டு கால அளவில் ஒரு செயல்திட்டத்தைக் கொண்டுள்ளது.