UNFCCC (பருவநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் சபையின் கட்டமைப்பு உடன்படிக்கை) அமைப்பினால் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டிற்கான NDC (தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்டப் பங்களிப்புகள்) தொகுப்பு அறிக்கையானது, பெலெமில் நடைபெற உள்ள COP30 மாநாட்டிற்கு முன்னதாகவே பருவநிலை சார் நடவடிக்கைகளை மதிப்பிடுகிறது.
கூட்டு உலகளாவிய உமிழ்வுகள் குறைந்து வந்தாலும், வெப்பமயமாதலை 1.5°C வரம்பிற்குள் கட்டுப்படுத்துவதற்கான பாரிசு உடன்படிக்கையின் இலக்கை அடைவதற்கான வேகம் போதுமானதாக இல்லை.
உலகளாவிய உமிழ்வுகளில் சுமார் 30% பங்கினைக் கொண்ட 64 நாடுகளின் புதிய NDCகள், 2035 ஆம் ஆண்டிற்குள் 2019 ஆம் ஆண்டில் இருந்த அளவை விட 17% வரை உமிழ்வைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
10 நாடுகளுள் 9 நாடுகள் தற்போது பொருளாதார அளவிலான உமிழ்வு இலக்குகளைக் கொண்டுள்ளன என்பதோடுமேலும் 97% நாடுகள் பருவநிலைச் செயல்படுத்தலை ஆதரிக்கும் தேசிய சட்டம் அல்லது கொள்கை கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன.
தகவமைப்பு நடவடிக்கைகள் 73% NDCகளில் சேர்க்கப்பட்டுள்ளன அதே நேரத்தில் 94% NDCகள் பருவநிலைத் தாக்கங்களிலிருந்து ஏற்படும் இழப்பு மற்றும் சேதத்தை நிவர்த்தி செய்வதற்கான குறிப்பு நடவடிக்கைகளாகும்.