TNPSC Thervupettagam

NDMA ஆணையத்திற்கு உறுப்பினர்கள் பரிந்துரை

September 4 , 2025 19 days 59 0
  • பிரதமர் இரண்டு புதிய உறுப்பினர்களைப் பரிந்துரைத்து, ஏற்கனவே உள்ள மூன்று உறுப்பினர்களை தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திற்கு (NDMA) மீண்டும் பரிந்துரைத்தார்.
  • அறிவியலாளர் தினேஷ் குமார் அஸ்வால் மற்றும் பேரிடர் மீட்பு நிபுணர் ரீட்டா மிஸ்ஸல் ஆகியோர் NDMA ஆணையத்தின் புதிய உறுப்பினர்களாக பரிந்துரைக்கப் பட்டனர்.
  • இராஜேந்திர சிங், கிருஷ்ண ஸ்வரூப் வட்சா மற்றும் துணை நிலை ஆளுநர் சையத் அட்டா ஹஸ்னைன் (பணி ஓய்வு) ஆகியோர் மேலும் மூன்று ஆண்டு காலத்திற்கு மீண்டும் பரிந்துரைக்கப்பட்டனர்.
  • இந்த நியமனங்கள் 2005 ஆம் ஆண்டு பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் 3(2)(b)வது பிரிவின் கீழ் மூன்று ஆண்டுகளுக்கு அல்லது மறு உத்தரவு வரும் வரை மேற்கொள்ளப்படுகின்றன.
  • இந்தியாவில் பேரிடர் மேலாண்மைக்கான உச்ச அமைப்பான NDMA ஆணையத்தின் தலைவராகப் பிரதமர் செயல்படுகிறார்.
  • பேரிடர் தடுப்பு, தணிப்பு, தயார்நிலை மற்றும் நடவடிக்கைகளுக்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வழிகாட்டுதல்களை வகுப்பதற்கு NDMA பொறுப்பு கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்