TNPSC Thervupettagam
June 24 , 2020 1848 days 714 0
  • தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நேரடியாக தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு (NDRF - National Disaster Relief Fund) பங்களிக்க அனுமதிக்கும் வகையிலான ஒரு பரிந்துரைக்கு மத்திய நிதித்துறை அமைச்சகமானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • NDRF ஆனது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
  • இது எந்தவொரு அச்சுறுத்தும் பேரிடர் சூழ்நிலைச் சமயத்திலும்அவசரகால மீட்பு, நிவாரணம், புனர்வாழ்வுஆகியவற்றிற்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் நிதியாகும்.
  • இது மாநிலங்களின் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிகளுக்கு உதவி புரிவதற்காக (கூடுதலாக) அமைக்கப் பட்டுள்ளது.
  • இதுவட்டி ஏதும் பெறப்படாத ஒதுக்கப்பட்ட நிதியம் என்பதின் கீழ் இந்திய அரசின் பொதுக் கணக்கில்வைக்கப் பட்டுள்ளது.
  • பிரதான் மந்திரி பாதுகாப்பு நிதியம் அல்லது பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியானது ஒரு பொது அமைப்பு அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்நிதி குறித்து தகவல் எதுவும் பெற முடியாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்