தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் நேரடியாக தேசியப் பேரிடர் நிவாரண நிதிக்கு (NDRF - National Disaster Relief Fund) பங்களிக்க அனுமதிக்கும் வகையிலான ஒரு பரிந்துரைக்கு மத்திய நிதித்துறை அமைச்சகமானது ஒப்புதல் வழங்கியுள்ளது.
NDRF ஆனது பேரிடர் மேலாண்மைச் சட்டம், 2005 என்ற சட்டத்தின் கீழ் அமைக்கப் பட்டுள்ளது.
இது எந்தவொரு அச்சுறுத்தும் பேரிடர் சூழ்நிலைச் சமயத்திலும் “அவசரகால மீட்பு, நிவாரணம், புனர்வாழ்வு” ஆகியவற்றிற்கான செலவுகளுக்குப் பயன்படுத்தப்படும் நிதியாகும்.
இது மாநிலங்களின் மாநிலப் பேரிடர் நிவாரண நிதிகளுக்கு உதவி புரிவதற்காக (கூடுதலாக) அமைக்கப் பட்டுள்ளது.
இது “வட்டி ஏதும் பெறப்படாத ஒதுக்கப்பட்ட நிதியம் என்பதின் கீழ் இந்திய அரசின் பொதுக் கணக்கில்” வைக்கப் பட்டுள்ளது.
பிரதான் மந்திரி பாதுகாப்பு நிதியம் அல்லது பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியானது ஒரு பொது அமைப்பு அல்ல. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்நிதி குறித்து தகவல் எதுவும் பெற முடியாது.