உள்ளடக்க உருவாக்குநர்கள் மற்றும் தாக்கத்தினை உண்டாக்கும் கருத்து வழங்கீட்டாளர்களுக்காக 2025 ஆம் ஆண்டு தேசிய எரிசக்தி பாதுகாப்பு விருதுகளின் (NECA) கீழ் எரிசக்தி திறன் வாரியம் ஒரு புதிய வகையை அறிமுகப்படுத்துகிறது.
இந்த முன்னெடுப்பு ஆனது ஆற்றல் திறன், வளங்காப்பு மற்றும் நிலையான வாழ்க்கை நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஊக்குவிக்க என்று டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட NECA ஆனது பல்வேறு துறைகளில் எரிசக்தி வளங் காப்பில் சிறந்து விளங்கும் அமைப்புகளை அங்கீகரிக்கும் ஒரு மதிப்பு மிக்கத் தளமாகும்.