NEP-2020ன் கீழ் பின்வரும் அமைப்புகள் அமைக்கப்படும்.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கழகமானது (NCERT - National Council of Educational Research and Training) 8 வயது வரை உள்ள குழந்தைகளுக்காக வேண்டி ஆரம்ப கால குழந்தைகள் நலம் மற்றும் கல்விக்கான தேசியக் கல்விசார் மற்றும் வழிகாட்டுக் கட்டமைப்பை உருவாக்க உள்ளது.
பள்ளி கல்விக்கான ஒரு விரிவான தேசியக் கல்விசார் கட்டமைப்பானது NCERTயினால் மேம்படுத்தப்படும்.
தேசிய ஆய்வு மையமான “பராக்” (முழுமையான வளர்ச்சிக்கான செயல்பாட்டு ஆய்வு, மறு ஆய்வு மற்றும் பகுப்பாய்வு) ஒரு தர நிர்ணய அமைப்பாக அமைக்கப் படும்.
தேசிய ஆராய்ச்சி அமைப்பானது (NRF - National Research Foundation) ஒரு வலுவான ஆராய்ச்சிக் கலாச்சாரத்தை உருவாக்குவதற்காக ஒரு தலைமை அமைப்பாக உருவாக்கப்படும்.
ஆசிரியர் கல்விக்கான ஒரு விரிவான தேசிய கல்விசார் கட்டமைப்பானது NCERT உடன் இணைந்து ஆசிரியர் கல்விக்கான தேசியக் கழகத்தினால் (NCTE - National Council for Teacher Education) உருவாக்கப்படும்.
ஆசிரியர்களைப் பணியில் சேர்ப்பதற்காக, ஆசிரியர்களுக்கான ஒரு பொது தேசியத் தொழில்சார் தரங்களானது (NPST - National Professional Standards for Teachers) 2022 ஆம் ஆண்டில் NCTEயினால் மேம்படுத்தப்படும்.
உயர் கல்விக்கான தரத்தை நிர்ணயித்தல் மற்றும் அங்கீகாரம் அளித்தலுக்காக மாநிலங்கள் / ஒன்றியப் பிரதேசங்கள் ஒரு தனிச் சுதந்திர மாநிலப் பள்ளித் தரங்கள் ஆணையத்தினை (SSSA - State School Standards Authority) ஏற்படுத்த உள்ளன.
ஒரு தன்னாட்சி அமைப்பான, தேசியக் கல்விசார் தொழில்நுட்ப மன்றமானது தொழில்நுட்பப் பயன்பாடு மீதான கருத்துகளின் தடையற்றப் பரிமாற்றலுக்கான ஒரு தளத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்படும்.
இந்திய மொழி பெயர்ப்பு மற்றும் பொருள்விளக்க நிறுவனம், பாலி, பாரசீகம் மற்றும் பிராகிருதம் ஆகிய மொழிகளுக்கான தேசிய மையம் ஆகியவற்றை அமைத்தல், உயர்கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தை வலுப்படுத்தல் & அனைத்து மொழித் துறைகளையும் வலுப்படுத்துதல்.
இந்திய உயர் கல்வி ஆணையமானது மருத்துவம் மற்றும் சட்டக் கல்வியைத் தவிர மற்ற அனைத்து உயர் கல்விக்கான ஒரு முழுமையான மற்றும் ஒற்றை உயர் தலைமை அமைப்பாக அமைக்கப்படும்.