NERDSD இலக்கு குறியீட்டு அறிக்கை மற்றும் முகப்புப் பக்கம்
August 29 , 2021 1479 days 615 0
வடகிழக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கான முதலாவது நிலையான மேம்பாட்டு இலக்கு குறியீட்டு அறிக்கை மற்றும் ஒரு முகப்புப் பக்கமானது 2021-22 (North Eastern Region District Sustainable Development (NERDSD) Goal Index Report and Dashboard) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது இந்தியாவில் இந்த வகையிலான முதலாவது பிராந்திய வாரியிலான மாவட்ட நிலையான மேம்பாட்டுக் குறியீடாக இருக்கும்.
இந்தக் குறியீடானது நிதி ஆயோக் மற்றும் வட கிழக்கு பகுதித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது எட்டு மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பிடும்.
இந்தப் பட்டியலில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் கிழக்கு சிக்கிம் மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது
நாகாலாந்தின் கிப்பயர் மாவட்டம் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.