TNPSC Thervupettagam

NERDSD இலக்கு குறியீட்டு அறிக்கை மற்றும் முகப்புப் பக்கம்

August 29 , 2021 1471 days 608 0
  • வடகிழக்குப் பகுதியில் உள்ள மாவட்டங்களுக்கான முதலாவது நிலையான மேம்பாட்டு இலக்கு குறியீட்டு அறிக்கை மற்றும் ஒரு முகப்புப் பக்கமானது 2021-22 (North Eastern Region District Sustainable Development (NERDSD) Goal Index Report and Dashboard) சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இது இந்தியாவில் இந்த வகையிலான முதலாவது பிராந்திய வாரியிலான மாவட்ட நிலையான மேம்பாட்டுக் குறியீடாக இருக்கும்.
  • இந்தக் குறியீடானது நிதி ஆயோக் மற்றும் வட கிழக்கு பகுதித் துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியினால் தயாரிக்கப்பட்டுள்ளது.
  • இது எட்டு மாநிலங்களிலும் உள்ள மாவட்டங்களின் செயல்திறனை மதிப்பிடும்.
  • இந்தப் பட்டியலில் நீடித்த வளர்ச்சி இலக்குகளை அடைவதில் கிழக்கு சிக்கிம் மாவட்டம் முன்னிலையில் இருக்கின்றது
  • நாகாலாந்தின் கிப்பயர் மாவட்டம் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்