ஜிஎம்ஆர் ஹைதராபாத் சர்வதேச விமான நிலையமானது தொடர்பற்ற (நேரடியாக அல்லாத) சுங்க வரிப் பரிவர்த்தனையுடன் கூடிய இந்தியாவின் முதலாவது முழுவதும் தொடர்பற்ற விமான நிலைய மகிழுந்து நிறுத்துமிடத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
ஜிஎம்ஆர் விமான நிலையமானது 2019 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதலாவது தேசிய மின்னணு சுங்கவரி வசூல் (NETC - National Electronic Toll Collection) விரைவு அடையாளச் சீட்டு (FASTag) கொண்ட மகிழுந்துப் பூங்காவை அறிமுகப்படுத்தியது.
இது இந்திய அரசின் “ஒரு தேசம் ஒரு அடையாளச் சீட்டு” –NETC FASTag என்ற திட்டத்தின் ஒரு பகுதியாகும்.