TNPSC Thervupettagam
January 9 , 2020 2048 days 896 0
  • மத்திய சுகாதார அமைச்சரான ஹர்ஷ வர்தன் நெட்ஸ்கோஃபான் (NetSCoFAN - உணவுப் பாதுகாப்பு மற்றும் பயன்பாட்டு ஊட்டச்சத்துக்கான அறிவியல் ஒத்துழைப்பு அமைப்பு) என்ற ஒரு அமைப்பைத் தொடங்கினார்.
  • இது உணவு மற்றும் ஊட்டச்சத்துத் துறையில் பணியாற்றும் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனங்களைக் கொண்ட ஒரு அமைப்பாகும்.
  • NetSCoFAN ஆனது உயிரியல், வேதியியல், ஊட்டச்சத்து & குறியிடல், விலங்குகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள், தாவரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உணவு வகைகள், நீர் & பானங்கள், உணவுச் சோதனை மற்றும் பாதுகாப்பான மற்றும் நிலையான பொதி கட்டுதல் போன்ற பல்வேறு பகுதிகளில் பணிபுரியும் எட்டு நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது.
  • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமானது எட்டு தலைமை நிறுவனங்களை அடையாளம் கண்டுள்ளது. இந்த நிறுவனங்கள் ஒரு “தயார்நிலை மதிப்பிடுதலை” உருவாக்க இருக்கின்றன. இது அனைத்து விதமான ஆராய்ச்சிப் பணிகள், நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் பட்டியலைக் கொண்டிருக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்