TNPSC Thervupettagam
June 3 , 2026 10 days 136 0
  • மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் 2023-24 ஆம் ஆண்டிற்கான தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-6-இன் (NFHS-6) அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • NFHS-6 ஆய்வானது 715 மாவட்டங்களில் உள்ள 6.79 லட்சம் வீடுகளை உள்ளடக்கி நடத்தப்பட்டது மற்றும் சர்வதேச மக்கள்தொகை அறிவியல் நிறுவனம் (IIPS) இதன் ஒருங்கிணைப்பு முகமையாகச் செயல்பட்டது.
  • பிரசவத்திற்கு முந்தைய பராமரிப்பு (ANC) 92.6%-லிருந்து 95.9%-ஆக அதிகரித்துள்ளது அதே சமயம் மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்கள் 88.6%-லிருந்து 90.6%-ஆக உயர்ந்துள்ளன.
  • 12 முதல் 23 மாதங்களுக்கு இடைப்பட்ட குழந்தைகளுக்கான முழுமையான நோய்த் தடுப்பு 83.8%-லிருந்து 87.1%-ஆக அதிகரித்துள்ளது.
  • ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே வளர்ச்சிக்குறைபாடு (Stunting) 35.5%-லிருந்து 29.3%-ஆக குறைந்துள்ளது, மேலும் கடுமையான மெலிவுறுதல் 7.7%-லிருந்து 5.2%-ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவின் மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) 2.0 ஆகத் தொடர்கிறது, அதே நேரத்தில் பெண்களின் இணையப் பயன்பாடு 33.3%-லிருந்து 64.3%-ஆக அதிகரித்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்