TNPSC Thervupettagam

NFHS-6 சுகாதார அறிக்கை 2026

July 27 , 2026 15 hrs 0 min 6 0
  • சமீபத்திய தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-6 (NFHS-6) தாய் மற்றும் சேய் சுகாதாரக் குறியீடுகளில் உள்ள மேம்பாடுகளையும், பெரியவர்களிடையே வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அதிகரிப்பையும் எடுத்துக்காட்டுகிறது.
  • மருத்துவமனை சார்ந்த பிரசவங்கள் 88.6% (NFHS-5: 2019–21) இலிருந்து 90.6% (NFHS-6: 2023–24) ஆக அதிகரித்துள்ளது, அதே வேளையில் கர்ப்பகாலப் பராமரிப்பு 95.9% ஐ எட்டி உள்ளது.
  • குழந்தைகளின் சுகாதாரக் குறியீடுகள் மேம்பட்டுள்ளன, முழுமையான நோய்த் தடுப்பு மருந்து வழங்குதல் 87.1% ஆக அதிகரித்துள்ளது மற்றும் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடையே வளர்ச்சி குறைபாடு 35.5% இலிருந்து 29.3% ஆக குறைந்து உள்ளது.
  • பெரியவர்களிடையே அதிக எடை, உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய்கள் அதிகரித்துள்ளன, இது வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் எழுச்சியைக் குறிக்கிறது.
  • இந்தியாவின் மொத்தக் கருவுறுதல் விகிதம் (TFR) மாற்று அளவான 2.1 க்கும் குறைவாக 2.0 என்ற அளவில் நிலையாக உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்