NGC 6505 அண்டத்தினைச் சுற்றி காணப்படும் ஐன்ஸ்டீன் வளையம்
February 22 , 2025 89 days 144 0
மிகச் சமீபத்தில், ஐரோப்பிய விண்வெளி முகமையின் (ESA) யூக்ளிட் விண்வெளி ஆய்வுக் கலமானது, NGC 6505 என்ற அண்டத்தில் ஒரு ஐன்ஸ்டீன் வளையம் காணப் படுவதைக் கண்டறிந்தது.
இது பூமியிலிருந்து 590 மில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.
ஐன்ஸ்டீன் வளையம் என்பது மிகவும் வலுவான ஈர்ப்பு குவிய விளைவின் ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
ஐன்ஸ்டீன் அவர்கள், அவற்றின் இருப்பைக் கணித்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு, 1998 ஆம் ஆண்டில் வானியலாளர்கள் முதலாவது ஐன்ஸ்டீன் வளையத்தைக் கண்டறிந்து உள்ளனர்.
ஒரு நட்சத்திரம் அல்லது அண்டம் போன்ற தொலைதூரப் பின்னணி பொருளிலிருந்து வரும் ஒளியை ஒரு ஈர்ப்புக் குவியம் நன்கு சிதைக்கும் போது ஒரு ஐன்ஸ்டீன் வளையம் உருவாக்கப்படுகிறது.