இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI), இஸ்ரோவின் தேசிய தொலை உணர்வு மையத்துடன் (NRSC) இணைந்து முதல் “தேசிய நெடுஞ்சாலைகள் பசுமைப் பரப்புக் குறியீட்டை (NH-GCI) 2025–26”-ஐ வெளியிட்டது.
இந்தக் குறியீடு செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி தேசிய நெடுஞ்சாலைப் பகுதிகளில் உள்ள பசுமைக் குடைகளின் சதவீதத்தை அளவிடுகிறது.
இது இஸ்ரோவின் Resourcesat-2/2A (LISS-IV) மற்றும் Cartosat-2S ஆகியவற்றிலிருந்து உயர்-தெளிவுத் திறன் கொண்ட பல்பட்டை நிறமாலை சார்ந்த படங்களைச் சரி பார்ப்பதற்காகப் பயன்படுத்துகிறது.
இந்த மதிப்பீடு 24 மாநிலங்களில் செயல்பாட்டு மற்றும் பராமரிப்பு கட்டத்தில் உள்ள சுமார் 30,000 கிமீ நெடுஞ்சாலைகளை உள்ளடக்கியது.
வெளிப்படைத்தன்மை மற்றும் பொது மக்கள் அணுகுவதற்காக இந்தத் தரவுகள் புவன் GIS தளத்தில் வெளியிடப்படுகின்றன.