NHRCன் கைதிகள் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை வழிகாட்டுதல்கள்
March 24 , 2026 96 days 175 0
தமிழ்நாட்டில் ஏற்பட்ட நடைமுறை குறைபாடுகளைத் தொடர்ந்து, கைதிகள் மரணம் தொடர்பான வழக்குகளில் பிரேத பரிசோதனைக்கான புதிய வழிகாட்டுதல்களை தேசிய மனித உரிமைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது.
பிரேத பரிசோதனைகள் குறைந்தது மூன்று மருத்துவர்களைக் கொண்ட ஒரு குழுவால் நடத்தப்பட வேண்டும் என்றும், அவர்கள் முன்னுரிமை அடிப்படையில் வெவ்வேறு மருத்துவமனைகளைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.
அனைத்து மருத்துவர்களும் தடய அறிவியலில் முதுகலைப் பட்டமும், குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டுதல்கள் பிரேத பரிசோதனையின் போது வெளிப்படைத்தன்மை, துல்லியம் ஆகியவற்றை உறுதி செய்வதையும், வெளித்தூண்டுதல்களைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
முக்கியமான வழக்குகளில் நிறுவனங்களுக்கு இடையேயான குழுக்கள் சிறந்த சரி பார்ப்பு மற்றும் சமநிலை முறையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.