மத்திய உள்துறை அமைச்சகமானது தேசியப் புலனாய்வு அமைப்பின் (NIA - National Investigation Agency) 3 கூடுதல் கிளைகளை (சென்னை, இம்பால், ராஞ்சி) அமைப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இது தீவிரவாதம் தொடர்பான வழக்குகள் குறித்தும் தேசியப் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்தும் விசாரணை நடத்துவதில் NIA-ன் திறனை வலுப்படுத்த இருக்கின்றது.
தற்பொழுது 9 நகரங்களில் NIA-ன் கிளைகள் உள்ளன
அவை குவஹாத்தி, ஜம்மு, கொல்கத்தா, கொச்சி, ஹைதராபாத், ராய்ப்பூர், லக்னோ, சண்டிகர் ஆகிய இடங்களில் அமைந்து உள்ளன.
NIA
இது இந்தியாவில் எந்தவொரு தீவிரவாத நடவடிக்கைகளை எதிர்ப்பதற்காகவும் கையாளுவதற்காகவும் வேண்டி இந்திய அரசினால் ஏற்படுத்தப்பட்ட ஒரு மத்திய நிறுவனமாகும்.
இது 2008 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று இந்தியப் பாராளுமன்றத்தினால் இயற்றப்பட்ட தேசியப் புலனாய்வு ஆணையச் சட்டம், 2008 என்ற சட்டத்துடன் சேர்த்து நடைமுறைக்கு வந்தது.
இது மும்பையில் நடத்தப்பட்ட 26/11 தீவிரவாதத் தாக்குதலுக்குப் பிறகு நிறைவேற்றப் பட்டது.
NIA ஆனது மாநில அரசுகளிடமிருந்து எந்தவொரு சிறப்பு அனுமதியைப் பெறாமலும் அனைத்து மாநிலங்களிலும் தீவிரவாதம் தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை செய்யும் அதிகாரம் பெற்றுள்ளது.