மத்திய அரசு 2021 ஆம் ஆண்டு ஜூலை 05 ஆம் தேதியன்று “NIPUN பாரத் முன்னெடுப்பு” எனும் புதிய ஒரு திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளது.
NIPUN என்பதன் விரிவாக்கம் “National Initiative for Proficiency in reading with Understanding and Numeracy” (புரிதல் மற்றும் எண்ணறிவு ஆகியவற்றுடன் கூடிய படிப்பாற்றலைப் பெறச் செய்வதற்கான ஒரு தேசிய முன்னெடுப்பு) என்பதாகும்.
பொதுவான கல்வியறிவு மற்றும் எண்ணறிவு ஆகியவற்றைப் பெறுதலை உறுதி செய்வதற்கான ஒரு முயற்சியில் அதற்குத் தக்க சூழ்நிலைகளை இந்த திட்டமானது வழங்கும்.
2026-27 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு குழந்தையும் தனது 3 ஆம் வகுப்பு படிப்பினை முடிக்கும் போது படிப்பாற்றல், எழுத்தாற்றல் மற்றும் எண்ணறிவு ஆகியவற்றில் போதுமான கற்றல் திறன்களை அடைவதை இது உறுதி செய்யும்.
இந்த முன்னெடுப்பானது சமக்ரா சிக்சா (Samagra Shiksha) எனும் பள்ளிக் கல்வித் திட்டத்தின் ஒரு அங்கமாகச் செயல்படும்.
இது ஐந்து அடுக்கிலான அமலாக்கச் செயல்முறையாகும்.
இது அனைத்து மாநில மற்றும் ஒன்றியப் பிரதேசங்களிலும் தேசிய, மாநில, மாவட்ட, வட்டார மற்றும் பள்ளி நிலைகளில் அமைக்கப்படும்.
இது புதிய கல்விக் கொள்கையைத் தொடர்ந்து அதற்கேற்ப உருவாக்கப்பட்டதாகும்.