NIPUN மின்னணு தளம் மூலம் டெல்லி காவல்துறைக்குப் பயிற்சி
November 17 , 2018 2537 days 855 0
காவல்துறையினருக்குப் பயிற்சியளிப்பதற்கும் உடனுக்குடனான தகவல்களை வழங்குவதற்கும் என்று டெல்லி காவல்துறையானது “நிபுண்” என்ற மின்னணு கற்றல் தளத்தை தொடங்கியுள்ளது.
ஆன்லைனில் கிடைக்கும் சிறப்பு படிப்புகள் மூலமாக காவல்துறைப் பணியாளர்களுக்கு பணி சம்பந்தப்பட்ட ஆன்லைன் பயிற்சிகள் மற்றும் தகவல்களை அளிப்பதை இந்த முன்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஆன்லைன் தளத்தின் படிப்புகளானது, கூட்டுமுயற்சி கற்றல் மற்றும் கூட்டுப் பங்காண்மைத் திட்டத்தின் (The Collaborative Learning and Partnership - CLAP) கீழ் பல்கலைக்கழக மானியக் குழு (UGC), FICCI, தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் டெல்லி பல்கலைக் கழகத்தின் ஜானகி தேவி நினைவுக் கல்லூரி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
டெல்லி காவல்துறைக்காக குறிப்பிட்ட படிப்புகளை உருவாக்க டெல்லி சட்ட சேவை ஆணையமும் ஒப்புக் கொண்டுள்ளது.