சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) NIRANTAR தளத்தை அறிமுகப்படுத்தியது.
NIRANTAR என்பது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB), மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியங்கள் (SPCBs), இந்திய வன ஆய்வு (FSI) மற்றும் இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) போன்ற MoEFCC நிறுவனங்களுக்கிடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு டிஜிட்டல் முகப்பு தளமாகும்.
இந்தத் தளம் சுற்றுச்சூழல் அனுமதிகள், காட்டுத் தீ எச்சரிக்கைகள் மற்றும் வன விலங்கு கடத்தல் தரவுகளை நிகழ்நேரக் கண்காணிப்பைச் செயல்படுத்துகிறது.
இது கொள்கை வகுப்பிற்காக ஒரே சாளரத்தின் கீழ் பல ஆராய்ச்சி அமைப்புகளின் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் தரவை ஒருங்கிணைக்கிறது.
NIRANTAR ஆனது PARIVESH போன்ற முந்தைய முன்னெடுப்புகளை விரிவுபடுத்துகிறது மற்றும் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துகிறது.
தரவு சார்ந்தப் பாதுகாப்பு மூலம் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (SDG) 13 (பருவநிலை நடவடிக்கை) மற்றும் 15 (நிலவாழ் உயிரினங்கள்) ஆகியவற்றை இந்த தளம் ஆதரிக்கிறது.