ஐதராபாத்தில் உள்ள தேசியக் கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனத்திலிருந்து (NIRDPR) விலக கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் (MoRD) முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையானது தேசியக் கிராமப்புற மேம்பாட்டு முன்னுரிமைகளிலிருந்து ஓர் அடிப்படை மாறுதலைக் குறிக்கிறது என்று பாராளுமன்ற நிலைக்குழு கூறியது.
NIRDPR ஆனது கிராமப்புற அதிகாரிகள், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் திறன்களை மேம்படுத்துவதற்காக உலகளவில் அங்கீகரிக்கப் பட்டுள்ள நிறுவனமாகும்.
அதனுடனான பல்வேறு இணைப்புகளைத் துண்டிப்பது NIRDPR நிறுவனத்தின் நம்பகத் தன்மையைச் சேதப்படுத்தும் என்றும் அதன் நீண்ட கால ஆராய்ச்சியைப் பலவீனப் படுத்தும் மற்றும் குறுகிய காலப் பணிகளுக்கு கவனம் செலுத்தும் என்றும் அக்குழு எச்சரித்தது.
"The minimum government and the maximum governance - அரசாங்கத்தின் குறைந்தபட்சத் தலையீடு, அதிகபட்ச நிர்வாகம்" என்ற அரசாங்கத்தின் கோருதலானது அதன் சிறப்புத் தன்மைக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் அது கூறியது.
இக்குழுவானது வலுவான ஒத்துழைப்பு, கட்டமைப்புச் சீர்திருத்தங்கள், பரவலாக்கப் பட்ட முடிவெடுத்தல், அதிக சுயாட்சி மற்றும் போதுமான நிதியுதவி ஆகியவற்றைப் பரிந்துரைத்தது.
மிகவும் முக்கிய நிர்வாகப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு குழுவை அமைக்க அது MoRD அமைச்சகத்தினை வலியுறுத்தியது மற்றும் நிலைத் தன்மை மீட்டெடுக்கப்படும் வரை அரசாங்க மானியங்கள் தொடர்வதுடன் உடனடியான தலைமைத்துவ மாற்றத்திற்கும் அது அழைப்பு விடுத்தது.