தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) இந்தியத் தரவரிசை 2025 அறிக்கையானது கல்வி அமைச்சகத்தால் வெளியிடப்பட்டது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் தொடர்ந்து ஏழாவது ஆண்டாக NIRF ஒட்டு மொத்தத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது.
சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக சிறந்த பொறியியல் கல்லூரியாக தரவரிசைப்படுத்தப்பட்டது.
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக பல்கலைக்கழகங்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் முன்னிலை வகித்தது.
அகமதாபாத்தின் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக சிறந்த மேலாண்மை நிறுவனமாக இருந்தது.
புது டெல்லியின் AIIMS தொடர்ந்து எட்டாவது ஆண்டாக மருத்துவத் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது மற்றும் முதல் முறையாக பல் மருத்துவப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
ஐதராபாத்தின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஒட்டுமொத்தமாக 12வது இடத்தையும், புதுமைப் பிரிவில் 6வது இடத்தையும் பிடித்தது.
புது டெல்லியின் ஜாமியா ஹம்டார்த், மருந்தியல் படிப்புகளில் முதல் இடத்தைப் பிடித்தது.
ரூர்க்கியின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம், கட்டிடக் கலை மற்றும் திட்டமிடல் பிரிவில் முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது.
டெல்லி இந்துக் கல்லூரி தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சிறந்த கல்லூரியாக தரவரிசைப்படுத்தப்பட்டது.
பெங்களூரு NLSIU தொடர்ந்து எட்டாவது ஆண்டாக சட்டப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது.
புது டெல்லியின் இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம், வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் முன்னணியில் இருந்தது.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் பெங்களூருவின் இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்திற்கு அடுத்தபடியாகப் பல்கலைக்கழகங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
புது டெல்லியின் IGNOU (இந்திரா காந்தி தேசிய திறந்த நிலைப் பல்கலைக்கழகம்) சிறந்த திறந்தநிலைப் பல்கலைக்கழகம் ஆக தரவரிசைப்படுத்தப்பட்டது.
புதியப் புத்தாக்கம் மற்றும் நிலையான மேம்பாட்டு இலக்குகள் பிரிவில் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் முதலிடத்தில் இருந்தது.
புனேவின் கூட்டு வாழ்வுத் திறன் மற்றும் தொழில்முறைப் பல்கலைக்கழகம் திறன் பல்கலைக்கழகங்கள் பிரிவில் முன்னிலை வகித்தது.
2016 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட பிரிவுகளுடன் தொடங்கிய NIRF தரவரிசை 2025 ஆம் ஆண்டிற்குள் ஒன்பது பிரிவுகள் மற்றும் எட்டு பாட களங்களுக்கு விரிவுப்படுத்தப் பட்டது.