NIRF நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசை 2025
September 25 , 2026 16 days 216 0
சமீபத்திய அதிகாரப்பூர்வ தேசிய நிறுவன தரவரிசைக் கட்டமைப்பு (NIRF) நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசையில் சென்னை இந்தியத் தொழில் நுட்பக் கழகம் (ஐ.ஐ.டி மெட்ராஸ்) முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் (IARI) மற்றும் ஜாமியா மில்லியா இஸ்லாமியா (JMI) ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) பிரிவு 2025 ஆம் ஆண்டு NIRFல் அறிமுகப் படுத்தப்பட்டது என்பதோடு இதன் மூலம் மொத்த தரவரிசைப் பிரிவுகளின் எண்ணிக்கை 16 இலிருந்து 17 ஆக அதிகரித்துள்ளது.
இது ஆற்றல் திறன், நீர் மேலாண்மை, கழிவுகளை அகற்றுதல், SDG தொடர்பான ஆராய்ச்சி, சமூகச் செயல்பாடு மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகியவற்றை மதிப்பீடு செய்கிறது.
ஐக்கிய நாடுகளின் 2030 திட்டத்தின் கீழ் உள்ள அனைத்து 17 நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கும் (SDGs) நிறுவனங்களின் பங்களிப்பை இந்த தரவரிசை உள்ளடக்கியுள்ளது.