இஸ்ரோ நிறுவனமானது இது வரை கட்டமைக்கப்பட்ட மிகவும் விலையுயர்ந்த குடிமை சேவைகள் பயன்பாடு சார்ந்த புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான நாசா-இஸ்ரோ சிந்தெடிக் அப்பெர்சர் ரேடார் செயற்கைக்கோளை (NASA-ISRO Synthetic Aperture Radar Satellite-NISAR) விண்ணில் ஏவியது.
NISAR என்பது நில நடுக்கங்கள், பனிப்பாறை இயக்கங்கள், கார்பன் பிரித்தெடுத்தல் மற்றும் பனிப்பாறை ஏரி உடைப்புகள் போன்ற பருவநிலை மாற்றத்தால் தூண்டப் பட்ட பேரழிவுகளைக் கண்காணிப்பதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தொழில்நுட்ப அற்புதமாகும்.
GSLV-F16 என்பது இந்தியாவின் புவி ஒத்திசைவு செயற்கைக்கோள் ஏவு வாகனத்தின் (GSLV) 18வது பயணமாகும், மேலும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட மீக்குளிர் நிலையிலான உந்திகள் கொண்ட (கிரையோஜெனிக்) நிலையுடன் கூடிய 12வது கலமாகும்.
சூரிய ஒத்திசைவு துருவச் சுற்றுப்பாதையில் ஒரு செயற்கைக்கோளை நிலை நிறுத்த GSLV பயன்படுத்தப்படும் முதல் பணி இதுவாகும்.
இந்த ஏவுதல் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு மட்டுமல்லாமல், உலகளாவிய முடிவெடுக்கும் மற்றும் அவசரகால எதிர் நடவடிக்கை முயற்சிகளுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.