TNPSC Thervupettagam

NIUAவின் 50 ஆண்டுகள்

June 18 , 2026 15 hrs 0 min 41 0
  • தேசிய நகர விவகாரங்களுக்கான நிறுவனம் (NIUA) ஆனது தனது பொன்விழாவை (50 ஆண்டுகள்) "Resilient Urban India @2047" என்ற கருத்துருவின் கீழ் விஞ்ஞான் பவனில் கொண்டாடியது.
  • NIUA என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) கீழ் உள்ள ஒரு முதன்மையான சிந்தனைக் குழுவாகும் மற்றும் இது 1976 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
  • நகர்ப்புற நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த அரசு இணைய வழிப் பயிற்சி (iGOT) – கர்மயோகிய திட்டத்தின் நகர்ப்புற பிரிவாக 'தேசிய நகர்ப்புற கற்றல் தளத்தை' இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தியது.
  • "நெகிழ்வான நகர்ப்புற இந்தியாவிற்கான பார்வை: நிலையான மற்றும் எதிர்கால-தயார் நகரங்களை உருவாக்குதல்" மற்றும் "இந்திய நகரமயமாக்கலின் புதிய புவியியலைப் புரிந்து கொள்வது: ஒரு புவிவெளியியல் அணுகுமுறை" ஆகிய இரண்டு முக்கிய வெளியீடுகள் வெளியிடப்பட்டன.
  • இந்த நிகழ்வில் பருவநிலை-பதிலளிக்கக்கூடிய திட்டமிடல், வீட்டுவசதி, இயக்கம், நகர்ப்புற நிதி, வட்டப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் ஆளுகை உள்ளிட்ட நகர்ப்புற நெகிழ்வுத்தன்மை குறித்த ஒன்பது தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்