தேசிய நகர விவகாரங்களுக்கான நிறுவனம் (NIUA) ஆனது தனது பொன்விழாவை (50 ஆண்டுகள்) "Resilient Urban India @2047" என்ற கருத்துருவின் கீழ் விஞ்ஞான் பவனில் கொண்டாடியது.
NIUA என்பது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் (MoHUA) கீழ் உள்ள ஒரு முதன்மையான சிந்தனைக் குழுவாகும் மற்றும் இது 1976 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
நகர்ப்புற நிர்வாகத்தில் திறன் மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்த அரசு இணைய வழிப் பயிற்சி (iGOT) – கர்மயோகிய திட்டத்தின் நகர்ப்புற பிரிவாக 'தேசிய நகர்ப்புற கற்றல் தளத்தை' இந்த நிகழ்வு அறிமுகப்படுத்தியது.
"நெகிழ்வான நகர்ப்புற இந்தியாவிற்கான பார்வை: நிலையான மற்றும் எதிர்கால-தயார் நகரங்களை உருவாக்குதல்" மற்றும் "இந்திய நகரமயமாக்கலின் புதிய புவியியலைப் புரிந்து கொள்வது: ஒரு புவிவெளியியல் அணுகுமுறை" ஆகிய இரண்டு முக்கிய வெளியீடுகள் வெளியிடப்பட்டன.
இந்த நிகழ்வில் பருவநிலை-பதிலளிக்கக்கூடிய திட்டமிடல், வீட்டுவசதி, இயக்கம், நகர்ப்புற நிதி, வட்டப் பொருளாதாரம் மற்றும் டிஜிட்டல் ஆளுகை உள்ளிட்ட நகர்ப்புற நெகிழ்வுத்தன்மை குறித்த ஒன்பது தொழில்நுட்ப அமர்வுகள் இடம்பெற்றன.