போதைப்பொருள் இல்லா இந்தியா இயக்கமானது (NMBA - Nasha Mukt Bharat Abhiyaan) போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தனது நாடு தழுவிய பிரச்சாரத்தின் மூலம் 34.54 கோடி குடிமக்களைச் சென்றடைந்துள்ளது.
போதைப்பொருள் துஷ்பிரயோகம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தடுப்பு, சிகிச்சை மற்றும் மறுவாழ்வு ஆதரவை வழங்கவும் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 2020 ஆம் ஆண்டில் NMBA தொடங்கப்பட்டது.
1.67 லட்சத்திற்கும் மேற்பட்ட போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நண்பர்கள் (Nasha Mukti Mitras) இப்பிரச்சாரத்தில் இணைந்துள்ளனர், இந்தியா முழுவதும் 31.40 லட்சத்திற்கும் மேற்பட்ட விழிப்புணர்வு மற்றும் மக்கள் தொடர்பு நடவடிக்கைகள் நடத்தப் பட்டுள்ளன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 755-க்கும் மேற்பட்ட புதிய போதைபொருள் தடுப்பு மறுவாழ்வு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன, அதே நேரத்தில் 1.67 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
NMBA இன் 6 வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத இறுதிக்குள் போதைப்பொருள் துஷ்பிரயோகத்திற்கு எதிரான தேசிய மக்கள் உறுதிமொழிக்காக 10 கோடிக்கும் அதிகமான குடிமக்களைத் திரட்ட அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.