TNPSC Thervupettagam

NMPA ஆணையத்திற்கான புதிய திட்டங்கள்

October 25 , 2025 11 days 38 0
  • துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் ஆனது, புதிய மங்களூர் துறைமுக ஆணையத்தின் (NMPA) பொன் விழா கொண்டாட்டங்களைத் தொடங்கியது.
  • துறைமுக உள்கட்டமைப்பு, தளவாடச் செயல்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்காக எட்டு பெரிய கடல்சார் மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப் பட்டன.
  • NMPA ஆனது ஆண்டிற்கு 104 மில்லியன் டன்கள் என்ற மொத்த திறன்களுடன் தற்போது ஆண்டுதோறும் 46.01 மில்லியன் டன் சரக்குகளைக் கையாளுகிறது.
  • சாகர்மாலா திட்டத்தின் கீழ், 2035 ஆம் ஆண்டிற்குள் 5.8 லட்சம் கோடி ரூபாய் மதிப்பு உள்ள 840 திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன; 1.41 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 272 திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளன.
  • தொடங்கப்பட்ட எட்டு திட்டங்களில் பின்வருவன அடங்கும்:
    • மொத்தம் 14,000 மெட்ரிக் டன் திறன் கொண்ட இரண்டு மூடப்பட்ட சேமிப்புக் கிடங்குகளின் கட்டுமானம்.
    • சர்வதேசச் சுற்றுலாப் பயணிகளுக்காக வேண்டி பிரத்தியேகப் பயணக் கப்பல் நுழைவாயிலை உருவாக்குதல்.
    • RFID குறியீடுடன் கூடிய சரக்கு கையாளுதல், சுங்கம் மற்றும் CISF வசதிகளுடன் KK நுழைவு வாயில் நுழைவு மற்றும் வெளியேறும் இடத்தை மாற்றியமைத்தல்.
    • சுங்க மையத்தில் ஒரு நாளைக்கு 50 முதல் 80 லாரிகள் வரை செல்லக் கூடிய வகையில் சரக்குந்து நிறுத்துமிட முனையத்தை விரிவுபடுத்துதல்.
    • MDL தளத்தில் வடிகால் வசதிகளுடன் 675 மீட்டர் முன் தகுதி பெற்ற ஒப்பந்ததாரர் (PQC) சாலையை அமைத்தல்.
    • பைக்கம்பாடியில் 180 முதல் 200 லாரிகள் வரை செல்லக்கூடிய வகையில் 20,000 சதுர மீட்டர் பரப்பளவில் சரக்குந்து நிறுத்துமிட முனையத்தை உருவாக்குதல்.
    • பொது-தனியார் கூட்டாண்மை முறையில் 107 கோடி ரூபாய் முதலீட்டில் 150 படுக்கைகள் கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை நிறுவுதல்.
    • மருத்துவமனைப் பயனாளிகளுக்காக என்று பிரத்தியேக மருத்துவச் செயலியை அறிமுகப் படுத்துதல்.
  • ஹரித் சாகர் வழிகாட்டுதல்கள், பசுமை இழுவைப்படகு மாற்றம் திட்டம் மற்றும் பசுமைக் கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் போன்ற முன்னெடுப்புகள் மூலம் நிலைத் தன்மை வலியுறுத்தப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்