TNPSC Thervupettagam

NOTTO கொள்கைப் புதுப்பிப்பு 2025

August 16 , 2025 2 days 24 0
  • உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையை அதிகரிக்க தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) ஆனது, மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களுக்கு 10 அம்ச ஆலோசனையை வெளியிட்டது.
  • பாலின வேறுபாட்டை நிவர்த்தி செய்வதற்காக மாற்று அறுவை சிகிச்சை காத்திருப்பு பட்டியலில் உள்ள பெண்களுக்கு கூடுதல் ஒதுக்கீட்டுப் புள்ளிகளை வழங்க இந்த ஆலோசனை முன்மொழிகிறது.
  • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு, முந்தைய இறந்த  உறுப்பு கொடையாளர்களின் நெருங்கிய உறவினர்களுக்கு முன்னுரிமை அளிக்கவும் இது பரிந்துரைக்கிறது.
  • மருத்துவமனைகள் ஆனது தேசியப் பதிவேட்டிற்காக கொடையாளர் மற்றும் பெறுநரின் தரவை வழங்கவும், அனைத்து மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் ஒரு தனித்துவமான NOTTO-ID அமைப்பினை ஒதுக்கவும் NOTTO பரிந்துரைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்