10வது இந்திய உறுப்பு தான தினமானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் 30 அன்று அனுசரிக்கப் பட்டது.
உறுப்பு தானத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக தமிழ்நாடு, குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு விருதுகள் வழங்கப் பட்டன. இந்த நிகழ்வானது மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoHFW - Union Health and Family Welfare Ministry) கீழ் உள்ள தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பினால் (NOTTO - National Organ and Tissue Transplant Organization) ஏற்பாடு செய்யப் பட்டது.
சடல (பிணம்) உறுப்பு தானத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக ஐந்தாவது முறையாக தமிழகத்திற்கு சிறந்த மாநில விருது வழங்கி கௌரவிக்கப் பட்டது.
தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை சிறப்பாகச் செயல்படும் மருத்துவமனைக்கான விருதைப் பெற்றுள்ளது.
உறுப்பு தான மற்றும் உறுப்பு மாற்றுச் சிகிச்சை தொடர்பான உலகளாவிய கண்காணிப்பின் (GODT - Global Observatory on Donation and Transplantation) படி, உலகில் அமெரிக்காவிற்கு அடுத்த படியாக இரண்டாவது நாடாக அதிக எண்ணிக்கையிலான உறுப்பு மாற்றுச் சிகிச்சைகளை இந்தியா மேற்கொள்கின்றது.