TNPSC Thervupettagam

NPS சீர்திருத்தக் குழு - M.S. சாஹூ

January 21 , 2026 10 hrs 0 min 27 0
  • தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) கீழ் உறுதியான கொடுப்பனவுகளுக்கான கட்டமைப்பை வடிவமைக்க ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஒரு உயர் மட்டக் குழுவை அமைத்துள்ளது.
  • இந்திய திவால்நிலை மற்றும் நொடிப்புநிலை வாரியத்தின் (IBBI) முன்னாள் தலைவர் M.S. சாஹூ தலைமையிலான இந்தக் குழுவில் 15 உறுப்பினர்கள் உள்ளனர்.
  • NPS முறையின் கீழ் ஓய்வூதிய வருமானத்திற்கான சந்தை அடிப்படையிலான, சட்டப் பூர்வமாக செயல்படுத்தக்கூடிய வழிகாட்டுதல்களை உருவாக்குவதே இதன் முக்கியக் குறிக்கோள் ஆகும்.
  • NPS என்பது 2004 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட, ஊழியர்கள் (10%) மற்றும் அரசாங்கத்தின் (14%) பங்களிப்புகளுடன் கூடிய ஒரு பங்களிப்பு சார்ந்த, சந்தையுடன் இணைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும்.
  • NPS வாத்சல்யா திட்டம் 2025, கல்வி மற்றும் மருத்துவ நோக்கங்களுக்காக பகுதியளவு பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதுடன் சிறார்களுக்கு சிறந்த நீண்டகால ஓய்வூதியச் சேமிப்பை வழங்குகிறது.
  • இந்த முன்னெடுப்பு ஓய்வுக்குப் பிறகு வருமான உறுதிப்பாட்டை உறுதி செய்வதையும் நிதிப் பாதுகாப்பை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்