மத்திய வேளாண் அமைச்சர், புது டெல்லியில் தேசிய விதைகள் கழகத்தின் (NSC) விதை செயல்முறையாக்க மற்றும் சிப்பம் கட்டும் அலகினைத் திறந்து வைத்தார்.
பூசா வளாகத்தில் உள்ள புதிய அலகு ஆனது ஒரு மணி நேரத்திற்கு ஒரு டன் கொள்ளவிலான காய்கறி மற்றும் மலர் விதைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பரேலி, தார்வாட், ஹாசன், சூரத்கர் மற்றும் ராய்ச்சூரில் உள்ள ஒவ்வொன்றும் ஒரு மணி நேரத்திற்கு நான்கு டன் செயல்முறையாக்கத் திறனைக் கொண்ட ஐந்து கூடுதல் NSC அலகுகள் காணொளி வாயிலாகத் திறக்கப்பட்டன.
"விதை மேலாண்மை 2.0" அமைப்பு மற்றும் விவசாயிகளுக்கான இயங்கலை வழி விதை முன்பதிவுத் தளம் உள்ளிட்ட டிஜிட்டல் முன்னெடுப்புகளையும் NSC அறிமுகப் படுத்தியது.
NSC ஆனது 1963 ஆம் ஆண்டில் நிறுவப் பட்டது.
NSC வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது மற்றும் சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளின் உற்பத்தி, செயல்முறையாக்கம் மற்றும் விநியோகத்தை உறுதி செய்கிறது.