டெல்லியில் உள்ள குடிமைப் பணி அதிகாரிகள் நிறுவனத்தில் (CSOI) குடிமைப் பணிகள் பயிற்சி நிறுவனங்களுக்கான 2.0 (NSCSTI 2.0) தேசியத் தரநிலைகளை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
இது திறன் மேம்பாட்டு ஆணையத்தினால் (CBC) உருவாக்கப்பட்டது.
இந்தப் புதுப்பிக்கப்பட்டக் கட்டமைப்பு ஆனது, எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள குடிமைப் பணியை உருவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
NSCSTI 2.0 கட்டமைப்பு ஆனது குடிமைப் பணிகள் பயிற்சிக்கு ஒரு நெறிப்படுத்தப்பட்ட மற்றும் உள்ளடக்கிய அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது.
மத்திய, மாநில மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் (ULBs) உட்பட அனைத்து அரசு நிலைகளிலும் உள்ள பயிற்சி நிறுவனங்களுக்கு இது பொருந்தக் கூடியது.
இது இந்திய அறிவு அமைப்புகள் (IKS), கர்மயோகி திறன் மாதிரி (KCM) மற்றும் அம்ரித் கியான் கோஷ் (AGK) போன்ற முற்போக்கான கூறுகளை உள்ளடக்கியது.