NSDC - Google India - செல்போன் செயலி மேம்பாட்டுத் திட்டம்
August 16 , 2017 3040 days 1273 0
தேதிய திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் கூகுள் இந்தியா நிறுவனம் இணைந்து செயலி உருவாக்குபவர்களுக்கு பயிற்சியளிக்கிறது. இதில் ஆண்டிராய்டு மற்றும் இணையதள சேவைகள் கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இது நாட்டின் செயலி செயல்பாட்டினை மேம்படுத்த உருவான திட்டம் ஆகும்.
இம்முயற்சியின் கீழ் NSDC, சில பயிற்றுத் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இவை ஆண்ட்ராய்டு தளத்தின் மூலம் இயங்கும் ஸ்மார்ட் போன்களில் செயலிகளை மேம்படுத்துவது தொடர்பாக பயிற்றுவிக்கும்.
NSDC ஓர் பொது-தனியார் பங்கீட்டு நிறுவனமாகும். இது திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தின் கீழ் இயங்குவது.
இதன் நோக்கம், நாட்டில் பயிற்சியளிப்பின் திறனை மேம்படுத்துவதாகும். தொழிற்கல்வியில் பயிற்சிக்கு நிதி ஒதுக்கி, திறன் மேம்பட்ட சந்தைச் சூழலை உருவாக்குகிறது. 2022-ற்குள் 150 மில்லியன் மக்களுக்கு பயிற்சி அளித்தல் அத்தியாவசியமான ஒன்றாகும்.