PREVIOUS
தேசியப் புள்ளியியல் அலுவலகமானது (NSO - National Statistical Office) “குடும்ப சமூக நுகர்வு : கல்வி” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையானது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில் 8000 கிராமங்கள் மற்றும் 6000 நகர்ப்புறப் பகுதிகளில் பரவியுள்ள 1.13 இலட்சம் குடும்பங்களை ஆய்வு செய்துள்ளது.
அறிக்கையின் அம்சங்கள்
7 வயது அல்லது அதற்கு மேற்பட்டோருக்கான அகில இந்தியக் கல்வியறிவு விகிதமானது 77.7% என்ற அளவிலும் ஊரகப் பகுதிகளில் 77.7% ஆகவும் நகர்ப்புறப் பகுதிகளில் 87.7% ஆகவும் உள்ளது.
எண்ணிலக்கப் பிளவில் (டிஜிட்டல் தொடர்பு) 4% ஊரகக் குடும்பங்கள் மட்டுமே கணினி அணுகலைப் பெறுகின்றன. 23% நகர்ப்புறக் குடும்பங்கள் மட்டுமே கணினி அணுகலைப் பெறுகின்றன.
மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஆகியோரின் மொத்த கல்வி வருகைப் பதிவு வீதம் நகர்ப்புறப் பகுதிகளிலும் ஊரகப் பகுதிகளிலும் 100% ஆக உள்ளது.