TNPSC Thervupettagam

NSTFDC வெள்ளி விழா

April 12 , 2026 15 hrs 0 min 10 0
  • தேசியப் பழங்குடியினர் நிதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (NSTFDC) தனது 25வது ஸ்தாபன தினத்தை ஏப்ரல் 10 அன்று புதுதில்லியில் கொண்டாடியது.
  • பழங்குடியின சமூகங்களுக்கான நிதி உள்ளடக்கம் மற்றும் வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • NSTFDC ஆனது 2001 ஆம் ஆண்டில் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் கீழ் ஒரு பொதுத்துறை நிறுவனமாக (PSU) நிறுவப்பட்டது.
  • இது இந்தியாவில் உள்ள பழங்குடியினரின் (STs) சமூக-பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக செயல்படுகிறது.
  • சுயவேலைவாய்ப்புக்காக சலுகைக் கடன்கள் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவை இக்கழகம் வழங்குகிறது.
  • இது மாநில வழிகாட்டும் முகமைகள் மூலம் செயல்படுகிறது மற்றும் இந்தியப் பழங்குடியினர் கூட்டுறவு சந்தைப்படுத்தல் மேம்பாட்டுக் கூட்டமைப்பின் (TRIFED) உதவியுடன் பழங்குடியினரின் தயாரிப்புகளை சந்தைப்படுத்த ஆதரவளிக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்