தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், தேசிய மஞ்சள் வாரியத்தின் (NTB) பிராந்திய அலுவலகம் மற்றும் அங்கீகாரம் பெற்ற மஞ்சள் பரிசோதனை ஆய்வகம் அமைக்கப் பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தெலுங்கானாவின் நிஜாமாபாத்தில் தலைமையகத்தினைக் கொண்டுள்ள NTB மேலும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.
இந்திய வேளாண் ஆராய்ச்சி சபை (ICAR) ஈரோட்டில் மஞ்சள் பரிசோதனை ஆய்வகத்தை நிறுவ உள்ளது.
அதிக குர்குமின் உள்ளடக்கம் கொண்ட புதிய மஞ்சள் வகைகளை உருவாக்குவதிலும் ICAR செயலாற்றும்.
இணைய வழி வணிக தளங்கள் மூலம் மஞ்சள் சந்தைப்படுத்தலை ஊக்குவிக்கவும், விவசாயிகளின் சிறப்பான வருமானத்திற்காக மதிப்புக் கூட்டல், சேமிப்பு மற்றும் செயலாக்கத்தை ஆதரிக்கவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.