தேசிய அனல்மின் நிலைய நிறுவனமானது (National Thermal Power Corporation – NTPC) எரிசக்தி மீதான ஐ.நா.வின் உயர்மட்ட பேச்சுவார்த்தையின் ஓர் அங்கமாக தனது எரிசக்திக்கான குறுகிய கால இலக்குகளை அறிவித்துள்ளது.
இந்தியாவில் இந்த அறிவிப்பினை வெளியிட்ட முதல் எரிசக்தி நிறுவனம் எனும் பெருமையை NTPC நிறுவனம் பெற்றுள்ளது.
NTPC நிறுவனமானது ஆற்றல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றல் உற்பத்தி நிறுவனமாகும்.
2032 ஆம் ஆண்டிற்குள் 60 GW திறனுடைய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மையத்தை நிறுவுவதற்கு NTPC நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் 2032 ஆம் ஆண்டுக்குள் நிகர ஆற்றல் செறிவினை 10% வரை குறைப்பதையும் இந்த நிறுவனம்இலக்காகக் கொண்டுள்ளது.