TNPSC Thervupettagam

OBC சான்றிதழ் – உச்ச நீதிமன்றம்

July 8 , 2025 2 days 46 0
  • ஒரு குழந்தை தனது தாய் வழி உறவில் OBC (இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சான்றிதழைப் பெற அனுமதிப்பது தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
  • தற்போதைய விதிகள் ஆனது தாய் வழி உறவுகள் மூலமாக அல்லாமல், தந்தை அல்லது தந்தைவழியான உறவின் மூலம் மட்டுமே OBC சான்றிதழைப் பெறுவதையே அங்கீகரிக்கின்றன.
  • 2012 ஆம் ஆண்டு வழக்கு (இரமேஷ்பாய் தபாய் நாய்கா மற்றும் குஜராத் மாநில அரசு), கலப்புத் திருமணம் செய்த தம்பதிகளின் குழந்தைகள் மிகப் பொதுவாக தந்தையின் சாதியைப் பின்பற்றுவதாகக் கருதப் படுகிறது, ஆனால் வளர்ப்பின் அடிப்படையில் இதை மாற்றலாம் என்று கூறுகிறது.
  • 2019 ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்ற வழக்கில், SC (பட்டியலிடப்பட்ட சாதியினர் வகுப்பு) பிரிவினைச் சேர்ந்த ஒரு தாய்க்கு, அவர்களின் மகன்கள் பாகுபாட்டினை எதிர் கொள்ளவில்லை என்பதைக் குறிப்பிட்டு, அவர்களுக்கு சாதிச் சான்றிதழ் மறுக்கப் பட்டது.
  • 2020 ஆம் ஆண்டில், டெல்லி உயர் நீதிம ன்றமானது, ஒரு குழந்தை தாயின் சாதியைக் கோர சாதி அடிப்படையிலான பாகுபாட்டினை எதிர்கொள்வதற்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் என்று கூறியது.
  • 2024 ஆம் ஆண்டில், கௌஹாத்தி உயர் நீதிமன்றமானது, சாதி அடையாளமானது வளர்ப்பு மற்றும் சமூகத்தின் யதார்த்த நிலையை அடிப்படையாகக் கொண்டது என்று கூறி, OBC பிரிவினைச் சேர்ந்த தாயால் வளர்க்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அந்த OBC சான்றிதழை வழங்க அனுமதித்தது.
  • தனியாளாக ஒரு தாயினால் மட்டுமே ஒரு குழந்தை வளர்க்கப்படுகின்ற சூழல்களில் சாதிச் சான்றிதழ்களுக்கான தேசிய விதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் தற்போது முடிவு செய்யலாம்.

​​

​​ 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்