OBC மாணவர்களுக்கான பள்ளிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகை
August 13 , 2018 2558 days 804 0
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA) இந்தியாவில் படிக்கும் மிகவும் பின்தங்கிய வகுப்பினர் மாணவர்களுக்கான பள்ளிக் கல்விக்கு பிந்தைய உதவித் தொகையை (PMS - OBC) 2020 வரை தொடரவும் திருத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.
PMS-OBC ஆனது 1998-99 முதல் செயல்பாட்டில் உள்ள சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் முதன்மைத் திட்டம் ஆகும்.
இது முழுமையான மத்திய நிதியுதவி திட்டமாகும்.
பள்ளிக் கல்விக்கு பிந்தைய அல்லது மேல் நிலையில் கல்வி பயிலும் OBC மாணவர்களின் படிப்பை முடிக்க நிதி உதவி வழங்குவதே இதன் நோக்கமாகும்.