TNPSC Thervupettagam

OBC பட்டியலில் NCBC பரிந்துரை

December 7 , 2025 17 days 86 0
  • மேற்கு வங்காளத்தின் மத்திய இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (OBC) இருந்து 35 சமூகங்களை நீக்குமாறு தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (NCBC) மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
  • இந்த 35 சமூகங்களில் பெரும்பாலானவை முஸ்லிம்கள் என்ற நிலையில் மேலும் இந்தப் பரிந்துரையானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட NCBC ஆய்வினைத் தொடர்ந்து முன் வைக்கப்பட்டுள்ளது.
  • இந்தச் சமூகங்கள் 2014 ஆம் ஆண்டில் மத்திய OBC பட்டியலில் சேர்க்கப்பட்டன என்ற நிலையில் மேலும் NCBC அந்த ஆண்டிலிருந்து மொத்தம் 37 சமூகங்களை மதிப்பாய்வு செய்தது.
  • மத்திய OBC பட்டியலில் ஏதேனும் மாற்றம் இருந்தால், குடியரசுத் தலைவர் புதுப்பிக்கப் பட்ட பட்டியலை அறிவிப்பதற்கு முன்னதாக அது பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட வேண்டும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்