OCHA அமைப்பின் புதிய தலைவர் - மார்டின் கிரிஃபித்ஸ்
May 16 , 2021 1555 days 730 0
இங்கிலாந்தின் மூத்த இராஜதந்திரியான மார்டின் கிரிஃபித்ஸ் அவர்கள் ஐக்கிய நாடுகள் அமைப்பின் மனிதநேய விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அமைப்பின் (Office of the Coordination of Humanitarian Affairs – OCHA) புதிய தலைவராக நியமிக்கப் பட்டுள்ளார்.
இவரின் பதவிக்காலம் ஐந்தாண்டுகளாகும்.
இவர் மார்க் லோகாக் (Mark Lowcock) என்பவருக்குப் பதிலாக OCHA அமைப்பின் மனித நேய விவகாரங்கள் மற்றும் நெருக்கடிக் கால நிவாரண ஒருங்கிணைப்பாளருக்கான ஒரு புதிய துணைப் பொதுச் செயலாளராக பொறுப்பேற்பார்.
சிக்கலான நெருக்கடி நிலைகள் மற்றும் இயற்கைப் பேரிடர்களை எதிர்கொள்வதற்காக சர்வதேச நாடுகளின் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த அமைப்பு செயல்படுகிறது.