TNPSC Thervupettagam

OCI அட்டை விதிகள் 2025

August 17 , 2025 2 days 48 0
  • இந்திய அரசானது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வெளிநாட்டினர் எந்த நுழைவு இசைவுச் சீட்டும் இல்லாமல் இந்தியாவுக்கு வருகை தர அனுமதிக்கின்ற தனது வெளிநாடு வாழ் இந்தியர்கள் குடியுரிமை (OCI) அட்டை விதிகளை கடுமையாக்கி உள்ளது.
  • கடுமையான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்டாலோ அல்லது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ள வழக்குகளில் முறையாக குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டாலோ தனிநபர்களின் OCI பதிவு ரத்து செய்யப்படும்.
  • இந்தத் துறை அமைச்சகமானது அட்டைகளை ரத்து செய்வதற்கான இரண்டு முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டது:
    • ஒரு OCI அட்டைதாரருக்கு இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மற்றும்
    • ஏழு ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படும் குற்றத்திற்காக அவர்கள் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டால்.
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்களுக்கு சலுகைகளை வழங்குவதற்காக இந்திய அரசாங்கத்தினால் 2005 ஆம் ஆண்டில் OCI அட்டைத் திட்டம் தொடங்கப்பட்டது.
  • OCI அட்டைதாரர்கள் இந்தியாவுக்கு வருகை தர பல நுழைவு, பல்நோக்கு வாழ்நாள் அளவிலான நுழைவுச் சீட்டினைப் பெறுகிறார்கள்.
  • இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தைப் பொருட்படுத்தாமல் உள்ளூர் காவல் துறையில் பதிவு செய்வதிலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது.
  • வேளாண்மை அல்லது தோட்ட நிலத்தின் உரிமையைத் தவிர்த்து, நிதி, பொருளாதாரம் மற்றும் கல்வி விவகாரங்களில் OCI  அட்டைதாரர்கள் வெளிநாடு வாழ் இந்தியர்களுடன் சம உரிமையைப் பெறுகிறார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்