TNPSC Thervupettagam

OECDன் இந்தியாவின் வளர்ச்சி கணிப்பு

October 3 , 2026 3 days 56 0
  • பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்பு (OECD), 2026 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மதிப்பிடப்பட்ட 6.3% லிருந்து 2026-27 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் வளர்ச்சி கணிப்பை 7.1% ஆக உயர்த்தியுள்ளது.
  • வலுவான உள்நாட்டு தேவை மற்றும் அரசாங்கக் கொள்கைகள் மேற்கு ஆசிய நெருக்கடியின் தாக்கத்தை இந்தியா தாங்கிக் கொள்ள உதவியதாக OECD தெரிவித்து உள்ளது.
  • 2026-27 ஆம் ஆண்டில் 7.1% ஆக இருக்கும் இந்தியாவின் வளர்ச்சி, 2027-28 ஆம் ஆண்டில் 6.5% ஆகக் குறையும் என அது எதிர்பார்க்கிறது.
  • S&P குளோபல் தனது 2026-27 ஆம் ஆண்டிற்கான கணிப்பை 7% ஆக உயர்த்தியுள்ளது, அதே சமயம் ஃபிட்ச் ரேட்டிங்ஸ் 6.9% ஆகவும், மூடிஸ் ரேட்டிங்ஸ் 7% ஆகவும் உயர்த்தி உள்ளன.
  • வாங்கும் திறன் குறைவதால் 2026-27 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வளர்ச்சி குறையும் என்றும், அதனைத் தொடர்ந்து 2027 ஆம் ஆண்டில் படிப்படியாக மீட்சி அடையும் என்றும் OECD எதிர்பார்க்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்