OECD-FAO வேளாண்மை குறித்த கண்ணோட்ட அறிக்கை 2025/2034
July 21 , 2025 70 days 105 0
பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு (OECD) மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு (FAO) ஆகியவை இணைந்து இந்த 21வது அறிக்கையினை வெளியிட்டன.
2034 ஆம் ஆண்டிற்குள், உலகின் தானிய உற்பத்தியில் சுமார் 40 சதவீதம் மட்டுமே மனிதர்களால் நேரடியாக நுகரப்படும்.
சுமார் 27 சதவீதம் என்ற வளர்ந்து வரும் பங்கு ஆனது உயிரி எரிபொருள் மற்றும் தொழில்துறை பயன்பாடுகளுக்கு அளிக்கப்படும்.
இந்தியா, பிரேசில் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளின் அதிகப்படியான ஒரு தேவையுடன், உயிரி எரிபொருள் தேவையானது ஆண்டுதோறும் சுமார் 0.9% வளர்ச்சி அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
பருத்தியின் உலகளாவிய பயன்பாடு அதிகரித்துள்ளது என்பதோடு இந்தியா சீனாவை முந்தி முன்னணி உற்பத்தியாளராக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.