ஜூலை மாதம் முதல் ஐக்கியப் பேரரசு-பிரான்சு One-in-one-out என்ற குடியேற்ற ஒப்பந்தத்தின் கீழ் நான்கு ஆண்கள் மட்டுமே பிரான்சு நாட்டிற்குத் திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தமானது, ஐக்கியப் பேரரசில் ஒருவருக்குப் புகலிடம் வழங்கப் பட்டதற்காக பிரான்சு நாட்டிற்குத் திரும்பிய ஒரு புலம்பெயர்ந்தவரைக் குடும்ப உறவுகளுடன் இடம் மாற்றிக் கொள்கிறது.
இந்த ஒப்பந்தம் பிரான்சிலிருந்து ஐக்கியப் பேரரசிற்கு ஆங்கில (இங்கிலீஷ்) கால்வாயின் வழியே அமைந்த ஆபத்தான சிறியப் படகு கடப்புப் பகுதிகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் இருந்த போதிலும், 2025 ஆம் ஆண்டில் 32,000க்கும் மேற்பட்டோர் இந்த கால்வாயைக் கடந்து சென்றுள்ளனர்.
ஆரம்பக் கட்ட இலக்காக வாரத்திற்கு 50 புலம்பெயர்ந்தோரை திருப்பி அனுப்புவதாக இருந்தது ஆனால் இதுவரை நான்கு பேர் மட்டுமே திருப்பி அனுப்பப் பட்டுள்ளனர்.