P-7 கனரகப் பொருட்களின் தரையிறக்க வான்குடை மிதவை அமைப்பு
September 22 , 2023 846 days 556 0
இந்த வான்குடை மிதவை அமைப்பு ஆனது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
இது முதன்மையாக கனரக உபகரணங்கள், வாகனங்கள் மற்றும் விமானங்களிலிருந்து இறக்கப்படும் பொருட்களை வான்வழியாக தரையிறக்கச் செய்ய பயன்படுத்தப்படுகின்ற ஓர் இராணுவ வான்குடை மிதவை அமைப்பாகும்.
இது போர்க்களத்தில் ஆயுதப்படைகளின் வான்குடை மிதவை வழி தரையிறக்கத் திறன்களை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் அதிகபட்ச சுமை தாங்கும் திறன் 8,500 கிலோ கிராம் மற்றும் அனுமதிக்கப்பட்ட சுமை வரம்பு 7,000 கிலோ ஆகும்.