மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் பாதுகாப்புக் கணக்குகளின் தலைமைக் கட்டுப்பாட்டாளர் (CGDA) ரஜ்னிஷ் குமார் “மாதாந்திரக் கொடுப்பனவுகள் வழங்கீட்டின் ஊதியப் பதிவேட்டினைத் தன்னியக்க முறையில் மாற்றுதல்” (PADMA) என்ற முறையைத் தொடங்கி வைத்தார்.
இது இந்தியக் கடலோரக் காவல்படைக்காக வேண்டி தொடங்கப்பட்ட தானியங்கு ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் வழங்கீட்டு அமைப்பாகும்.
இது பாதுகாப்புக் கணக்குத் துறையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
மாதாந்திரக் கொடுப்பனவுகள் வழங்கீட்டின் ஊதியப் பதிவேட்டினைத் தன்னியக்க முறையில் மாற்றுதல் திட்டம் தொடங்கப்பட்ட நிகழ்வானது ஒரு மையப்படுத்தப்பட்ட ஊதிய முறையின் (CPS) தொடக்கத்தைக் குறிக்கிறது.