புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) PAIMANA (நாட்டைக் கட்டமைப்பதற்கான திட்ட மதிப்பீடு, உள்கட்டமைப்பு கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு) என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது ₹150 கோடி மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்புள்ள மத்திய துறை உள்கட்டமைப்புத் திட்டங்களைக் கண்காணிப்பதற்கான ஒரு இணைய அடிப்படையிலான தளமாகும்.
இது சிறந்த நிகழ்நேரக் கண்காணிப்புக்காக OCMS-2006 (நிகழ்நேர கணினிமயமாக்கப் பட்ட கண்காணிப்பு அமைப்பு) அமைப்பிற்குப் பதிலாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் தளமானது, API-களைப் (பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம்) பயன்படுத்தி, DPIIT-இன் (தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை) ஒருங்கிணைந்த திட்ட கண்காணிப்பு தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
2025 டிசம்பர் நிலவரப்படி, 1,392 உள்கட்டமைப்புத் திட்டங்கள் இந்த தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த இணையதளம் வெளிப்படைத்தன்மை, தரவுகளின் தரம் மற்றும் உள் கட்டமைப்புத் திட்டங்களை உரிய நேரத்தில் முடிப்பதை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.